செலுசைடிஸ் என்பது தோல் மற்றும் ஆழ்ந்த திசுக்கள் மீது பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோயாகும்.
செலுலைடிஸ் (உயிரணு அழற்சி) என்பது என்ன?செலுலைடிஸ் என்பது பக்டீரியாவால் அல்லது கிருமிகளால் தோலில் ஏற்படும் ஒரு பொதுவான தொற்றுநோயாகும். இந்த நோய் வீங்கியதாக சிகப்பு நிறமுடையதாகத் தென்படுவதோடு அந்தப் பகுதி சூடானதாகவும் வலியுள்ளதாகவும் இருக்கும். செலுலைடிஸ் உடலின் எந்தப்பகுதியிலும் ஏற்படலாம். இது ஒரு சிறிய பகுதியில் ஆரம்பித்து பிறகு பெரிதாகலாம். பராமரிக்கப்படாமல் விடப்பட்டால், தசைகள் அல்லது மூட்டுகள் போன்ற உடலின் ஏனைய பகுதிகளுக்கு இந்த நோய் பரவலாம், அல்லது பிள்ளையின் நிணநீர்த்தொகுதியினூடாக (லிம்∴பான்ஜைடிஸ்) அல்லது இரத்த ஓட்டத்தினூடாக (பக்டீரேமியா) விரிவான முறையில் பரவலாம்.இந்தத் தொற்றுநோய்க்கு நீங்கள் சிகிச்சை செய்யாவிட்டால் அது தசைகள் அல்லது மூட்டுக்களுக்குப் பரவி நிலைமையை மோசமாக்கும். செலுலைடிஸ் நோய் உங்கள் பிள்ளையின் நிணநீர்த்தொகுதி (லிம்∴பான்ஜைடிஸ்) அல்லது இரத்த ஓட்டத்தைப் (பக்டீரேமியா) பாதிக்கலாம்.
அன்டிபையோடிக் மருந்து முழுவதையும் உபயோகிக்கவும்பிள்ளையின் நிலைமை முன்னேறி வரும்போதும்கூட மருந்துக் குறிப்பிலுள்ள அன்டிபையோடிக் மருந்து முழுவதையும் கொடுத்து முடிக்கவும். தொற்றுநோய் திரும்பவும் வரலாம். விசேஷமாக சிகிச்சையைத் தகுந்த முறையில் பூர்த்தி செய்யாவிட்டால் அவ்வாறு சம்பவிக்கலாம்.